வீடு புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. போலீஸ்காரர் கைது!
Intruder enters the house and assaults a young woman Policeman arrested
இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளம்பெண்ணிம் தவறாக நடந்த சம்பவம் நடுவூர்மாதாகுப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு நடுவூர்மாதாகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மின்பிடித்து கொண்டிருந்தபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 24 மணி நேரமும் போலீசார் நடுவூர்மாதகுப்பத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சியூர் பகுதியை சேர்ந்த சுதாகர் என்ற போலீஸ்காரர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மீனவர் ஒருவர் குடும்பத்துடன் வெளியே படுத்து தூங்கிகொண்டு இருந்தார். இந்தநிலையில் 20 வயது இளம்பெண் நள்ளிரவில் தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் சென்றதை நோட்டமிட்ட போலீஸ்காரர் சுதாகர் பின்னால் சென்று கதவை பூட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் சக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் அங்கு சென்று சுதாகரிடம் கேட்டபோது தண்ணீர் கேட்டு வந்ததாக கூறினார். மேலும் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சுதாகரை கைது செய்தனர். இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளம்பெண்ணிம் தவறாக நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Intruder enters the house and assaults a young woman Policeman arrested