ரூ.2.85 கோடி மதிப்பில் வாய்க்கால் சீரமைப்புப் பணி..MLA அனிபால் கென்னடி நடவடிக்கை!
Work on the drainage renovation worth Rs. 2.85 crores MLA Anibal Kennedy takes action
உப்பளம் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பிலான வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களால் முன்னெடுப்பு காரணமாக மழையால் சேர்ந்த குப்பைகள் எம்எல்ஏ அவரால் தூர்வாரப்பட்டது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், உப்பளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் புதுச்சேரி மாநில முதல்வரின் ஒத்துழைப்புடன் அவர் முன்னிலையில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியின் தலைமையில் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டன.
இந்த வாய்க்கால், கடலூர் ரோட்டிலிருந்து வாணரப்பேட்டை – தாமரை நகர் – அமலோற்பவன் பள்ளி அருகே – இந்திரா நகர் வழியாக சென்று உப்பனாற்றில் கலக்கும் நீளமான வாய்க்கால் ஆகும். காலப்போக்கில் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் சுகாதார பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் டாக்டர் ஆர்த்தி அவர்களுடன் ஆலோசனை நடத்தி, தூர் வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். வாய்க்கால் மேலே சில இடங்களில் 4 கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதால் சீரமைப்பு பணி இடைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாய்க்கால் சீரமைக்கும் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்க அதிகாரிகளிடம் சட்ட மன்ற உறுப்பினர் அதன் அவசியம் அறிந்து மக்கள் சுகதரத்திற்காக வலியுறுத்தினார். அதிகாரிகள், மழைக்காலம் முடிந்ததும் ஜூலை மாதத்தில் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
மேலும் வாணரப்பேட்டையில் உள்ள அலேன் வீதியில் அமலோற்பவன் பள்ளியை ஒட்டியுள்ள வாய்க்காலில் தூர்வாரும் பணியும் சுத்திகரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று, இப்பகுதியில் குடிநீர் பழுப்பு நிறமாக வருகிறது என்ற புகாரினை அடுத்து, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள் வெங்கடேஷ் மற்றும் கணேசனுடன் உரையாடி, குடிநீர் பைப் லைன் வாஷ் அவுட் பணிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வட்டார காங்கிரஸ் தலைவர் லக்ஷ்மணன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி மற்றும் கிளைச் செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary
Work on the drainage renovation worth Rs. 2.85 crores MLA Anibal Kennedy takes action