இன்று உலக தேனீ தினம்!. - Seithipunal
Seithipunal


இன்று உலக தேனீ தினம்!.

உலக தேனீ தினம் (World Bee Day) ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜானியா 1734 இல் பிறந்தார். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகள். அவற்றில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.

 சுலோவீனியாவின் ப்ரெஸ்னிகாவில் 2018 உலக தேனீ தின கொண்டாட்டம்
இந்தப் பன்னாட்டு நாளின் நோக்கமாகச் சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு மகரந்தச் சேர்க்கையில் பங்கை தேனீக்களின், மற்ற அளி இனங்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதாகும். தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான ஞிமிறு, வண்டு, போன்றவற்றைக் கொண்டாட உலக அளி நாள் தொடங்கப்பட்டுள்ளது.

 மே 20 ஆம் தேதியை உலக தேனீ தினமாக 2017 டிசம்பரில் சுலோவீனியாவில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் அவையினைச் சார்ந்த உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is World Bee Day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->