பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் CM ஸ்டாலின்! வெளியான அறிவிப்பு!
CM MK Stalin NITI Aayog meet
தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு, கூட்டாட்சி ஆளுமையின் வலிமை, மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப, திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன், 2015ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவராக உள்ளார்.
இந்த அமைப்பின் முக்கிய கூட்டங்கள் பிரதமர் தலைமையில் நடைபெறும். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு சம நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல மாநில தலைவர்கள் பங்கேற்க மறுத்தனர்.
மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டாலும், பேச்சுக்கு குறைந்த நேரம் வழங்கப்பட்டதாகவும், மைக் அணைக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், கூட்டாட்சி என்றால் இது தானா? என்ற கேள்வியுடன், எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் 24ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு முக்கிய தலைவர்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
English Summary
CM MK Stalin NITI Aayog meet