இந்த அதிசயத்தை பாருங்களே...! ஆஞ்சநேயர் உருவம் போல் எரிந்த நெருப்பு..! - ஆச்சரியத்துடன் நடிகை பதிவு
Look at this miracle fire burning like image of Anjaneya Actress posts with surprise
தெலுங்கு தொலைக்காட்சி நடிகை அனசுயா பரத்வாஜ் என்பவர் சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தியுள்ளார்.

இதில் யாக குண்டத்திலிருந்த எரிந்த தீயில் ஆஞ்சநேயர் கடவுள் ''அனுமன்'' உருவம் தோன்றியுள்ளது. இந்த நிகழ்வை கைபேசியில் படம் பிடித்த நடிகை, அந்தப் புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
நடிகை அனசுயா பரத்வாஜ்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,''ஜெய் ஹனுமான் என்று நினைக்காமல் நான் எதையும் செய்வதில்லை. நான் அனுமனை என் தந்தையாகக் கருதுகிறேன் என்பது என் அன்புக்குரிய அனைவருக்கும் தெரியும்.நாம் எந்த கடவுளுக்கும் சத்தமாக ஏதாவது சொல்ல விரும்பினால் அதை ஒரு ஹோமம் மூலம் சொல்கிறோம்.
அனுமன்ஜி எங்கள் குடும்பப் பெயரையும், எங்கள் வீட்டையும் எங்களையும் ஆசீர்வதிக்க வந்தார்.எல்லோரும் ஆன்மீகவாதிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது''என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, நடிகை அவருடைய வீட்டிற்கு ''சஞ்சீவினி இல்லம்'' என பெயரிட்டுள்ளார்.
English Summary
Look at this miracle fire burning like image of Anjaneya Actress posts with surprise