வசதியற்ற, குழந்தைகளுக்கு ஜீவன் செயல்திட்டம்.. அறிமுகம் செய்த காவேரி மருத்துவமனை!  - Seithipunal
Seithipunal


காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் ‘ஜீவன் செயல்திட்டம்’வசதியற்ற, குழந்தைகளுக்கு இலவச முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைகளை வழங்க மித்ரா ரோட்டரி கிளப்-ன் ஒத்துழைப்போடு செயல்படுத்துகிறது,

 இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. 

ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பங்கேற்கும் ரோட்டரி கிளப்கள் வழியாக திரட்டப்பட்டிருக்கும் ரூ. 85 இலட்சம் என்ற நிதி உதவியின் ஆதரவோடு இந்த முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் முதல் கட்டத்தில் எவ்வித கட்டணமோ, செலவோ இன்றி குறைந்தது 35 குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சைகள் ஜீவன் செயல்திட்டத்தின் கீழ் செய்யப்படும். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசியகாவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் & செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் 

ரோட்டரி கிளப்களுடன் இணைந்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒத்துழைப்பின் கீழ் 100-க்கும் அதிகமான இத்தகைய அறுவைசிகிச்சைகள் கட்டணமின்றி இலவசமாக குழந்தைகளுக்கு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

“இந்த குழந்தைகளுள் பலர், குறைபிரசவத்தில் உரிய காலத்திற்கு முன்பே பிறந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள். உரிய நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சை இக்குழந்தைகளுக்கு வழங்கப்படாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிற ஊனம்/திறனிழப்பு அல்லது உயிரிழப்பை இக்குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜீவன் செயல்திட்டத்தின் வழியாக இக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும். இத்தகைய அறுவைசிகிச்சைகள் மிகவும் நுட்பமானவை; 

இவற்றை செய்வதற்கு நல்ல ஒருங்கிணைப்புள்ள மருத்துவர்கள் குழு தேவைப்படுகிறது. இச்சிகிச்சைகளின் மூலம் சாத்தியமுள்ள மிகச் சிறந்த விளைவுகளை வழங்குவதற்கு காவேரி மருத்துவமனை முழுமையான வசதிகளையும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Introducing the Kaaviri Hospitals Life Action Plan for underprivileged children


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->