கள்ளக்காதலுக்கு இடையூறு... தயிரில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி!
Interference in an illicit loveWife poisoned her husband by mixing poison in yogurt
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் முதல்முறை சாவில் இருந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்த கணவருக்கு இரண்டாவது முறையாக தயிரில் விஷத்தை கலந்து கொடுத்து சாகடித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தம்பதி சுனில், சஷி. இவர்கள் பிரோசாபாத் பகுதியில் வசித்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுனிலின் மனைவிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யாதவேந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இந்த கள்ளக்காதல் உறவிற்கு இடையூறாக இருந்த கணவன் சுனிலை தீர்த்துக்கட்ட வேண்டும் என சஷி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் திட்டம் தீட்டிகடந்த மே 13-ம் தேதி உணவில் கலந்து சுனிலுக்கு சாப்பிட கொடுத்தார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். இந்தநிலையில் மனைவி இரண்டாவது முறையாக தயிரில் விஷத்தை கலந்து சாப்பிட கொடுக்கப்பட்டதால் சுனில் பரிதாபமாக உயிரிழந்தார் .
இதனை அவரது குடும்பத்தினர் ஒரு இயற்கை மரணம் என்று நம்பினர். இதனை தொடர்ந்து சுனிலின் தாயார் தனது மருமகள் சஷியின் மீது சந்தேகம் உள்ளதாக துண்ட்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சஷியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சஷி தனது கள்ளக்காதலனுடன் திட்டமிட்டு சுனிலை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சஷி மற்றும் யாதவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுக்காக கணவருக்கு இரண்டு முறை விஷம் கொடுத்து பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Interference in an illicit loveWife poisoned her husband by mixing poison in yogurt