புத்தகங்களுக்கு பதிலாக பையில் துப்பாக்கி! ஒடிசா பள்ளியில் 14 வயது மாணவன் ஆசிரியரை மிரட்டிய பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவன் ஒருவர், ஒழுங்காக பள்ளிக்கு வராமலும், படிப்பிலும் கவனம் செலுத்தாமலும், வகுப்பறையில் அடிக்கடி இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த மாணவனை தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சிறுவன் தனது பள்ளிப் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டு கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டி, “சுட்டுவிடுவேன்” என தலைமை ஆசிரியரை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் சம்பவத்தால் பள்ளி வளாகமே பதற்றத்தில் மூழ்கியது. உடனடியாக ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனிடமிருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை தொடங்கினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சிறுவன் தலைமை ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை காட்டியுள்ளான். அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரித்து வருகிறோம்.

இவ்வளவு சிறிய வயதில் அவனுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.பள்ளி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே உருவாகும் மனஅழுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Instead books gun bag 14 year old student threatened teacher school Odisha shocking incident


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->