இந்தியன்-2 படத்துக்கு தடை? ஆசான் வழக்கில் திடீர் திருப்பம்! எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில், விரைவில் திரைக்கு வர உள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு தடை கோரி, வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வர்மக்கலை என்பது ராஜேந்திரனுக்கு சொந்தமானது இல்லை, எனவே அவரின் பெயரை படத்தில் உபயோகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. 

இதனை அடுத்து அவர்களின் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமலஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகவில்லை என்றால் இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் வாதம், பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

மேலும், அப்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அனைத்தும் அவர்களை கட்டுப்படுத்தும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian2 shankar kamalhaasan chennai hc case


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->