முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு மோடி வர வேண்டும் என்பது ஆசை தான்! - அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


வரும் 30ம் தேதி பாரத பிரதமர் மோடி தமிழகம் வருகை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி பயணம் செய்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியானது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அன்றைய தினம் பசும்பொன் தேவரின் குருபூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல் பரவியது.  தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழக வருகை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிரதமர் மோடி வருவது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அனைத்து திட்டங்களும் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அவ்வாறு தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருகை இல்லை என அண்ணாமலை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும் அடுத்த வருடம் குரு பூஜையில் கலந்து கொள்ள தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Prime Minister Modi will not visit Tamil Nadu for muthuramalingam guru pooja


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->