இந்தியா-பாகிஸ்தான் போர்.. மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கும் டிரம்ப்.நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியா - பாகிஸ்தான் இருவரும் பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். அதை நான் நிறுத்தினேன் என்று மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22,தேதி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கி சூடு தாக்குதலில்  26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு ஆப்ரேஷன் சிந்தூர்  நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சுமார் ஐந்து நாட்கள் இந்த சண்டை நீடித்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் அதனை அறிவித்திருந்தார். தனது மத்தியஸ்தத்தின் பெயரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இந்திய அரசு கூறும் நிலையில், டிரம்ப் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறி வருகிறார். அந்த வகையில் அர்மேனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இன்று மற்றொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இருவரும் பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். அதை நான் நிறுத்தினேன். ஒரு அணுசக்தி மோதலுக்கு முன்னதாக அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர் என்று தெரிவித்தார். மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு - ருவாண்டா, தாய்லாந்து - கம்போடியா ஆகிய மோதல்களிலும் தனது அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India Pakistan war Trump repeatedly signals about it What happened?


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->