சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி - சித்தராமையா தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


பெங்களூரு லால்பாக் பூங்காவில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள  மலர் கண்காட்சியை முதலமைச்சர்  சித்தராமையா தொடங்கி வைத்தார்.

கர்நாடக தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி பெங்களூரு லால்பாக்கில் நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது சுதந்திர தினவிழா மலர் கண்காட்சிக்கு லால்பாக் பூங்கா கண்ணாடி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை முதல்-மந்திரி சித்தராமையா  தொடங்கி வைத்தார்.

சுதந்திர போராட்ட வீரர்கள் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்  மலர் கண்காட்சி தொடங்கியது. இதில் 1¾ லட்சம் பூக்களில் கித்தூர் கோட்டை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்கள் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா அவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட காட்சிகள் மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் சிலைகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. 


அத்துடன் 3¼ லட்சம் வண்ண வண்ண மலர்களால் கித்தூர் கோட்டை மாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பூக்களால் ஆன அலங்கார வளைவு, பறவைகளும் பார்த்து ரசிக்கும் படி உள்ளன. 

இது 218-வது மலர் கண்காட்சி ஆகும்.இந்த கண்காட்சியை பார்வையிட சிறுவர்கள், பெரியவர்களுக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு கட்டணமாக வார நாட்களில் ரூ.80-ம், வார இறுதி நாட்களில் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறை 11 லட்சம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 9.07 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இதன் மூலம் ரூ.3.44 கோடி வருவாய் கிடைத்தது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கண்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Independence Day Flower Exhibition Inaugurated by Sittaraman


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->