சைபர் குற்றங்கள் அதிகரிப்பு..அந்தமாவட்டத்தில் மட்டும் 7 மாதங்களில் ரூ.49 கோடி மோசடி! - Seithipunal
Seithipunal


கோவையில் சைபர் குற்றங்கள் மூலம் கடந்த 7 மாதங்களில் ரூ.49 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில்  இணைய வழி மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதற்காக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர், இந்த இந்த இணைய வழி மோசடிகாரர்கள்  பல்வேறு யுத்திகளை கையாண்டு  பொது மக்களின் பணத்தை அபகரித்து வருகின்றனர். இதனை தடுக்க  பல்வேறு விழிப்புணர் களையும் காவல்துறையை செய்து வருகிறது. இருந்த போதும் இந்த இணை வழி மோசடியானது தொடர் கதையாக உள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த இணைய வழி மோசடிக்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில்கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது :கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நகரை பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. இதில் இருந்து தப்பிக்க எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருக்க வேண்டும். சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் மோசடியால் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியாளர்களிடம் இருந்து ரூ.14 கோடியை மீட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

இதில் சைபர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பிரவீன்குமார், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தன், அஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in cyber crimes In that district alone a fraud of 49 crore rupees in just 7 months


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->