"இயேசு அழைக்கிறார்" தினகரன் வீட்டில் சிக்கிய தங்கக்கட்டிகள்! வருமான வரித்துறை அதிரடி!
Income tax raid in Jesus calls Paul Dhinakaran House
பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் தமிழகத்தில் விரைவில் அதிரடி வருமான வரித்துறை சோதனைகள் இருக்கும் என பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பால் தினகரன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கினர்.

இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பை நடத்தி வரும் பால் தினகரன் இல்லம் உட்பட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானவரி ஏய்ப்பு & வெளிநாட்டு வருவாய், முதலீடு மறைப்பு புகாரின் பெயரில் இயேசு அழைக்கிறார் குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கோவை லட்சுமி மில் அருகே உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் சோதனை நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், மதபோதகர் பால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கோவை காருண்யா பல்கலை கழக வளாகத்தில் உள்ள வீட்டிலிருந்து பறிமுதல் செய்ததாகவும் வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளனர்.
ரிசர்வ் பேங் அனுமதியின்றி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் அளித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.
English Summary
Income tax raid in Jesus calls Paul Dhinakaran House