நடுரோட்டில் தகாத வார்த்தைகள்… காரையும் எட்டி உதைத்த இளம்பெண்...! திருவல்லிக்கேணியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அவரை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்று இரவு சென்றுள்ளார்.

அப்போது அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. உணவகத்தில் இருந்தபோதும், பின்னர் சாலையில் நடந்து சென்றபோதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை நோக்கி தகாத வார்த்தைகளைப் பேசி திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த வழியாக சென்ற கார் ஒன்றையும் காலால் எட்டி உதைத்ததாகத் தெரிகிறது.இளம்பெண்ணின் அநாகரிகமான செயல்களால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த ஒருவர் இளம்பெண்ணின் தலையில் பலமுறை தாக்கியதாகத் தெரிகிறது.இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்த நிலையில், அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவின.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்களிடம் சிக்கியிருந்த இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், பின்னர் அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

இளம்பெண்ணுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியதுடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனமாக இருக்குமாறு பெற்றோருக்கும் அறிவுறுத்தினர். இதையடுத்து இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Inappropriate words middle road young woman who kicked car There stir Thiruvallikeni


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->