கள்ளக்காதலை குணமாக கண்டித்த மனைவி... போட்டுத்தள்ளிய கணவன்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் குணசேகரன் (வயது 35). இவரது மனைவியின் பெயர் பழனியம்மாள் (வயது 29). கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறில் இருக்கும் எஸ்டேட்டில் குணசேகரன் பணியாற்றி வந்துள்ளார். 

இவருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இந்த நேரத்தில் பழக்கம் ஏற்படவே, இவர்களின் பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த விஷயத்தை அறிந்த பழனியம்மாள் தனது கணவரை கண்டிக்கவே, இதனால் இருவருக்குள்ளும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இவர்களுக்குள் சம்பவத்தன்று வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பழனியம்மாள் தனது தாயாரின் இல்லத்திற்கு செல்லவே, குணசேகரன் பழனியம்மாள் தாயாரின் இல்லத்திற்கு சென்று சண்டையிட்டுள்ளார். இதற்கு பின்னர் பழனியம்மாள் மயமாகியுள்ளார். 

பின்னர் பழனியம்மாளின் சடலம் அங்குள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், கணவன் - மனைவி தகராறில் மனைவியை கொலை செய்து பின்னர் மூணாறுக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூணாறில் வைத்து குணசேகரனை கைது செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in viruthunagar district wife killed by husband


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->