மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை வழங்கிய கொடூரன்.! நடுரோட்டியில் வழுக்கி விழ வைத்த மக்கள்.!!
in viruthunagar culprit arrest by police sexual harassment
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில்., அங்குள்ள ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தில் வாக்காளர்கள் பலரும் அங்குள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளனர்.
இந்த சம்யத்தில்., இப்பகுதியில் வசித்து வரும் சமுத்திரராஜன் (வயது 39) என்ற கொடூரன் வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
கொடூரனின் எண்ணங்களை அறியாத சிறுமி பயந்து அலறவே., அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சமுத்திரராஜனை பிடித்து அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு அளித்து சென்றனர்.

தொடர் தேர்தல் பனியின் காரணமாக காவல் துறையினர் காவல் நிலையத்தில் இல்லாத நிலையில்., கொடூரனின் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்த தகவல் அப்பகுதியில் பரவ துவங்கியுள்ளது.
இதனையறிந்த மக்கள் வாக்களிக்க மறுப்பு தெரிவித்து., கொடூரனின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை வைத்தனர். இந்த நேரத்தில் தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல் துறை அதிகாரி விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து முதலறிக்கையை பொதுமக்களிடம் காண்பித்த பிறகு வாக்களிக்க துவங்கினர். இதனால் 45 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
Tamil online news Today News in Tamil
English Summary
in viruthunagar culprit arrest by police sexual harassment