பள்ளத்தில் முட்டுக்கொடுத்த பேருந்து.! ஓட்டுனரின் பின்பக்கத்தில் பாய்ந்த கண்ணாடி.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தனியார் பேருந்து முனையத்தில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்தானது தினமும் பல்வேறு மாவட்டங்களுக்கும்., பிற மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., நேற்று வழக்கம் போல சென்னையில் இருந்து திருப்பூருக்கு செல்ல எஸ்.ஆர்.எஸ் பேருந்து தயாரானது.

இந்த பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருப்பூருக்கு புறப்பட்ட நிலையில்., இப்பேருந்தை சத்யராஜ் பாபு என்பவர் இயக்கினார். இந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்ற நிலையில்., பேருந்து ஓட்டுனருக்கு களைப்பு மிகுதியால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு தூக்கம் வந்துள்ளது. 

இதனால் பேருந்து தறிகெட்டு ஓடிய நிலையில்., சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு விபத்திற்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய விபத்தில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில்., இவ்விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்., பேருந்தின் முன்புற கண்ணாடியை உடைத்து சத்யராஜ் பாபுவை மீட்டனர். 

accident, accident images,

இந்த நேரத்தில் பேருந்தின் ஓட்டுனர் சத்யராஜ் பாபுவுக்கு கண்ணடி வெட்டியதால் பலத்த காயமடைந்த நிலையில்., காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும்., சத்யராஜ் பாபு கடந்த 10 தினமாக சபரிமலை சுற்றுலா பேருந்தை இயக்கி வந்ததாகவும்., அவருக்கு கூடுதல் பணியின் அடிப்படையில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டினார். 

இதனை ஏற்க மறுத்த ஓட்டுநர்., ஒரு நாள் ஓய்விற்கு பின்னர் பேருந்தை இயக்கியதாக கூறி சமாளித்துள்ளார். மேலும்., சில தனியார் பேருந்துகளின் நிறுவனங்கள் போதியளவு ஓட்டுநர் இல்லாமல்., நிர்பந்தத்தின் காரணமாக ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து பணியை வழங்கி செய்ய சொல்வதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in vilupuram srs bus accident passengers injured police investigate about it


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->