குழந்தையின் அழுகையை நிறுத்த தாயார் செய்த காரியம்..! துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!! வேலூரில் பெரும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவியின் பெயர் பவித்ரா (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் ரம்யா (வயது 3) என்ற பெண் குழந்தையும்., ஒன்றரை வயதாகும் மவுலிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன் - மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்து., பவித்ரா குழந்தையோடு தனியாக வசித்து வந்துள்ளார். 

பவித்ரா காஞ்சிபுரத்தில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்., நேற்றிரவு பச்சிளம் குழந்தையான மவுலிகா அழுதுகொண்டே இருந்துள்ளது. 

baby, baby images,

குழந்தையை தொடர்ந்து சமாதானம் செய்த நிலையிலும்., குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியை வைத்துள்ளார். 

இதனால் குழந்தை சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதை அடுத்து., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பவித்ரா குழந்தையை எடுத்துக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து., இந்த விஷயத்தை அறிந்த கிராம நிர்வாக அலுவலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., பவித்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore child unfortunately died by mother police investigation going on


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal