வாயில நல்லா வருது... முதல்வரின் வாயில் வராத சில விஷயங்கள்... ஜெயக்குமார் பதிலடி!
admk jayakumar reply cm vijay
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி கிழக்கில் தனக்கு வாக்களித்த மக்களை வரவழைத்து நன்றி சொன்ன முதல்வரின் வாயில் வராத சில விஷயங்கள்...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500
வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள்
மாதம் ஒருமுறை மின்சார அளவீடு
5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி
மாவட்ட வாரியாக சிறப்பு திட்டங்கள்
முதல்வரான பின்பும் எதிர் கட்சிகளை எதிரிகளாக சித்தரித்து சினிமா அரசியல் செய்யும் முதல்வர் அவர்களே, திருச்சி வரை சென்று வீர வசனம் பேசியதற்கு பதிலாக தாங்கள் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒருசிலதாவது வாயில வந்திருந்தா நல்லாருந்துருக்கும்...." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
admk jayakumar reply cm vijay