எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற? சவுக்கு சங்கர் வீடியோவை வெளியிட்ட அதிமுக!
admk savukku sankar video tvk govt
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. சவுக்கு சங்கர் பல்வேறு தகவல்களைக் கூறி பொய்க்கால் குதிரை அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் CTR நிர்மல்குமார் ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது. எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
English Summary
admk savukku sankar video tvk govt