கே.என். நேரு மீது பாய்ந்த வழக்கு... பாஜக தரப்பில் வந்த முக்கிய செய்தி!
bjp vanathi srinivasan dmk kn nehru case
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு அவர்கள் அதிகாரிகள் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறப்படும் செய்தி சற்றே ஆறுதல் அளிக்கிறது.
அமலாக்கத்துறை மற்றும் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது காலதாமதம் என்றாலும் அதனை வரவேற்கிறேன்.
வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் உரிய விசாரணையை விரைவில் மேற்கொண்டு இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு நிறுத்த லஞ்ச ஒழிப்புத் துறையை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp vanathi srinivasan dmk kn nehru case