'இந்தியா நம்பகமான நட்பு நாடு; அதனுடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும்'; புதின் உறுதி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையும் பாராட்டுக்குரியவை என்றும், இந்தியா உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு. அதனுடனான உறவுகளை தங்கள் நாடு தொடர்ந்து விரிவுபடுத்தும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளதாவது;

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையும் பாராட்டுக்குரியவை என்றும், இந்தியா உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா ஈர்க்கக்கூடிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது என்றும், இது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய அரசு மேற்கொண்டு வரும் கடின உழைப்பின் விளைவே இது என்று தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவுடனான உறவை குறைத்துக்கொள்ளுமாறு இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துகின்றன என்றும், இந்திய - ரஷ்ய உறவில் எந்தவித எதிர்மறையான விளைவுகளையும் நாங்கள் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சில துறைகளில் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை குறைத்துக்கொள்ள அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முயல்கிறதாகவும், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியா மீது, பிரதமர் நரேந்திர மோடி மீது அழுத்தம் கொடுப்பது சர்வதேச உறவுகளுக்கும் இருதரப்பு உறவுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவில் எந்த தீவிரமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும், இந்தியாவுடனான உறவுகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். அதை தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா தனது சொந்த தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும், அமெரிக்கா உடனான இந்தியாவின் தூதரக உறவுகள், ரஷ்யா உடனான அதன் நீண்டகால உறவுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தேச நலன்களுக்கு முக்கியமானதாகக் கருதும் அனைத்து நாடுகளுடைனும் இந்தியா தனது உறவுகளை வளர்த்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும்,  இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு என்றும், இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. அதனுடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.

அதேப்போன்று, உக்ரைன் பிரச்சினைக்குத் தீர்வு காண ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கு உக்ரைன் இணங்க வேண்டும் என்றும், அதற்கான பணியைத்தான் நாங்கள் இப்போது மேற்கொண்டு வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை அது உள்ளூர் விவகாரம். ஆனால், ஈரான் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணிக்க உதவும் எந்த ஒரு முடிவையும் ஆதரிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது என்று ரஷ்ய அதிபர் என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Putin affirms that Russia will continue to expand relations with India


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->