நட்புகளுடன் மதுபோதையில் அலப்பறை.. காவல் துறையினரிடம் சிக்கியதும், சிறகடித்த குள்ளநரிகள்.. நூதன தண்டனை.!!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன் (வயது 18). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மது போதையில், தலைக்கவசம் அணியாது நண்பர்கள் 4 பேருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். 

இருசக்கர வாகனத்தை பாலமுருகன் இயக்க, இவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்துள்ளனர். இதனை கண்ட சக வாகன ஓட்டி ஒருவர் தனது அலைபேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, திருச்சி போக்குவரத்து காவல் துறையினரும் இது தொடர்பான காட்சிகளை கண்டுள்ளனர். 

பின்னர் போதையில் வாகனம் ஒட்டிய பாலமுருகன் மற்றும் அவனது நண்பர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பாலமுருகனை நேற்று கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிபதி சுமதி நாகராஜன் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், நேற்று (24/01/2020) மற்றும் இன்று (25/01/2020) ஆகிய இரண்டு நாட்கள் காவல் துறையினருடன் சேர்த்து வாகனங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டுள்ளார். 

நீதிபதியின் உத்தரவின் பேரில் பாலமுருகன் அங்குள்ள திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் இருக்கும் காவல் துறையினருடன் பாலமுருகனும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும், இது தொடர்பான காவல் துறையினர் தெரிவித்த சமயத்தில், மது போதையில் வாகனம் இயக்குபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, பாலமுருகனுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற தண்டனை பிற வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், இளைஞர்களில் பெரும்பாலானோர் அபராதம் செலுத்திய பின்னரும், இதே தவறை தொடர்ந்து செய்து வரும் நிலையில், இது பிறருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இரண்டு நாட்கள் நூதன தண்டனைக்கு உள்ளான பாலமுருகன் தெரிவித்த நேரத்தில், தான் இனி மது அருந்திவிட்டு வாகனம் இயக்கமாட்டேன் என்றும், நண்பர்களின் தூண்டுதல் எனக்கு நல்ல பாடத்தை கற்பித்து கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Trichy youngster punish by Judge due to drunk and drive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->