'லெட்டர் பேடு' கட்சியா நாங்க..? திமுக கூட்டணியில் விரிசல்..? கொந்தளிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
TVK Rebels Against Letter Pad Status
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) நிர்வாகிகள் மத்தியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாகத் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் நிர்வாகிகள் ஆவேசமாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
நிர்வாகிகளின் முக்கியக் குமுறல்கள்:
அங்கீகாரப் போராட்டம்: "லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட 15 ஆண்டுகால அரசியல் கட்சியை, வெறும் 'லெட்டர் பேடு' அமைப்புகளுடன் ஒப்பிட்டு ஒரே ஒரு சீட் மட்டும் ஒதுக்குவது எங்களை அவமானப்படுத்துவதற்குச் சமம்."
நிபந்தனைகள்: இம்முறை 1 ராஜ்ய சபா சீட் மற்றும் 3 எம்எல்ஏ தொகுதிகள் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை திமுக வழங்க வேண்டும்.
அரசியல் அழுத்தம்: 10.5% இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரங்களில் திமுக மீது வன்னிய இளைஞர்களிடம் உள்ள அதிருப்தியைச் சரிசெய்யத் தவாக-வின் தயவு திமுக-வுக்குத் தேவை.
மாற்றுத் திட்டம்?
திமுக உரிய அங்கீகாரம் அளிக்கும் என வேல்முருகன் நம்பினாலும், நிர்வாகிகள் "கூட்டணியை மறுபரீசிலனை செய்யத் தயங்கக் கூடாது" என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, அதிமுக தனது கூட்டணியில் நிலவும் வன்னியர் வாக்கு வங்கிச் சிக்கலைச் சரிசெய்ய வேல்முருகனைத் தன் பக்கம் இழுக்க ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
"நமக்கான மரியாதை இல்லையெனில், ஓரிரு இடங்களைப் பெற்று அசிங்கப்படுவதை விடத் தனித்துவமான முடிவை எடுப்பதே சிறந்தது" என்பதே தவாக தொண்டர்களின் தற்போதைய மனநிலை என்கிறது அரசியல் வட்டாரம்.
English Summary
TVK Rebels Against Letter Pad Status