கழிவறைக்கு சென்ற சிறுமி கடத்தல்..?..! திருச்சி பேருந்து நிலையத்தில் பேரதிர்ச்சி... பதறும் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தாலுகா திருமங்கலம் வள்ளுவர் தெரு பகுதியை சார்ந்தவர் வரதராஜன். இவரது மகளின் பெயர் கனிமொழி (வயது 17). இவர் கடந்த 15 ஆம் தேதியன்று இரவு நேரத்தில், தனது உறவினர் மோகனசுந்தரன் என்பவருடன் ஊருக்கு செல்ல கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில், இவர்கள் இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கியிருந்த நிலையில், கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வராததால், அங்குள்ள பகுதியில் தேடியும் விசாரித்தும் தகவல் இல்லை. இதனையடுத்து கனிமொழியின் தந்தைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். 

இதன்பின் உறவினர்களுடன் விரைந்து வந்த வரதராஜன் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தேடியலைந்த நிலையில், இவரை எங்கு தேடியும் காணாததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். மேலும், இவர் மாயமான நேரத்தில் மஞ்சள் நிற சுடிதார், பச்சை நிற பேண்ட் அணிந்திருந்துள்ளார். 

இவராக எங்கும் சென்றுள்ளாரா? மர்ம நபர்கள் கடத்தினரா? என்பது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேரோடு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl missing police investigate


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal