ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேத்திகளை விற்பனை செய்த துயரம்.. விசாரணையில் காவல்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகேயுள்ள கிராமத்தில் இரண்டு சிறுமிகள் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் இடைத்தரகர்கள் மூலமாக பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில்., இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., சிறுமியின் பாட்டி சிறுமிகளை ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சந்தேகத்தின் பேரின் கிராம நிர்வாக அதிகாரி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். 

indian money,

இந்த விசாரணையில் சிறுமியின் பாட்டி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட இரண்டு பெண்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., இரண்டு சிறுமிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 

மேலும்., சிறுமிகள் இருவரும் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து., சிறுமிகளை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur grand ma sales 2 child girls police investigation


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal