இளம்பெண்ணிற்கு காதல் தொல்லை.. பேருந்தை இடைமறித்து இளைஞர்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. திருநெல்வேலியில் தரமான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த தொழிலதிபர் மகள் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று விடுமுறை எடுத்து தனியார் சொகுசு பேருந்தில் திருநெல்வேலிக்கு புறப்பட்டு பயணம் செய்துள்ளார். 

இந்த பேருந்திலேயே இவருடன் பணியாற்றி வரும் 3 இளைஞர்கள் திருநெல்வேலிக்கு பயணம் செய்த நிலையில், ஒருவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்தவர். மற்ற இரண்டு பேரும் திருநெல்வேலியை சார்ந்தவர்கள். 

இவர்கள் மூவரும் காதலர் தினத்தில் எப்படியாவது பெண்ணை காதல் செய்ய வேண்டும் என்று எண்ணி ஆம்னி பேருந்தில் பயணம் செய்து, இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுத்து வந்துள்ளனர். மேலும், மூவரில் ஒரு இளைஞர் காதல் தொல்லை கொடுத்தபடியே பயணம் செய்து வந்துள்ளான். 

இந்த விஷயத்தால் கடும் எரிச்சலுக்கு உள்ளான பெண்மணி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் மறுநாள் காலையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் ஆம்னி பேருந்தை வழிமறித்துள்ளனர். இவர்கள் யார் என்று பார்த்தல் பெண்ணின் உறவினர்கள் ஆவார்கள்..

அனைவரும் உள்ளே ஏறி பெண்ணை பத்திரமாக மீட்டு, இளைஞர்களின் சட்டையை பிடித்து இழுத்து வந்து அடித்து நொறுக்கினர். இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரிக்கையில், பெண் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை.. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மூவரையும் காரில் ஏற்றி அழைத்து சென்ற நிலையில், இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli youngster love torture girl relation attacked


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal