முதலிடத்தில் “விஜய்..எதில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் “விஜய்”இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியினை கடந்த ஆண்டு தொடங்கினார். இதன்பின்னர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 அக்டோபரில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்து விளக்கினார். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கொள்கை எதிரி எனவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசியல் எதிரி எனவும் காட்டமாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கடந்த மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க, தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை நேரடியாக விஜய் விமர்சித்தார். குறிப்பாக தி.மு.க தலைவரும் முதல்-அமைச்சருமான ஸ்டாலினை விஜய் கடுமையாக சாடியிருந்தார். 

இதையடுத்து  எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் விஜய். 
இந்தநிலையில் , தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.

விஜய்க்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 1 கோடியே 46 லட்சம், ‘பேஸ்புக்’கில் 77 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இன்ஸ்டாகிராமில்’ 18 லட்சம், ‘பேஸ்புக்’கில் 31 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், ‘பேஸ்புக்’கில் 1.68 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தமிழக அரசியல்வாதிகளில் இந்தமூன்று  பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.

விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the first position Vijay do you know where?


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->