சிறுமியை கடத்தி சென்று நாள் முழுவதும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.! தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் உள்ள தோப்புநாயக்கன் விடுதியை சார்ந்தவர் ரஜினி (வயது 38). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு வழக்கம் போல சென்று கொண்டு இருந்த நிலையில்., சிறுமியை மர்ம நபரொருவர் கடத்தி சென்றுள்ளான். சிறுமியை நாள் முழுவதும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். 

kidnapped, kidnapping,

மகளின் நிலையை அறியாத பெற்றோர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு இன்னும் வரவில்லை என்று எண்ணி பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். இந்த சமயத்தில்., சிறுமி காலையில் இருந்து பள்ளிக்கு வரவில்லை என்று சிறுமியின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த தருணத்தில்., சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் மறுநாள் காலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு., இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான். பயந்துபோன சிறுமி அங்கிருந்து பேருந்தில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இவரை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் என்ன ஆனது? என்று கேட்கவே., நடந்ததை கண்ணீருடன் கதறியபடியே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் கொடூரன் ரஜினியை கைது செய்து., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur girl kidnapped and sexual harassment police arrest culprit


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal