மகளை சீரழித்து அப்பாவி இளைஞரின் வாழ்க்கையை பாழாக்கிய காமுக தந்தை... தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் கிராமத்தை சார்ந்த 50 வயது நபர் கொத்தனார் பணி செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவரது மூத்த மகள் பாட்டியின் இல்லத்தில் தங்கியிருந்து கல்லூரியில் பயின்று வந்துள்ளார். 15 வயதான மற்றொரு மகள் கொத்தனாருடன் வசித்து வந்த நிலையில், இவர் கர்ப்பிணியாக இருப்பது கடந்த மார்ச் மாதத்தில் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான கொத்தனார் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமாய்த்தில், உடையாளூர் மண்டி தெருப்பகுதியை சார்ந்த செந்தில் (வயது 28) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து காவல் துறையினர் கடந்த மார்ச் மாதத்தின் போது 15 ஆம் தேதி செந்திலை கைது செய்த நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். சிறுமியின் வயிற்றில் குழந்தை இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தையை வெளியே எடுத்த நிலையில், குழந்தையின் இரத்த மாதிரியும், செந்திலின் இரத்த மாதிரியும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செந்திலின் மரபணு, குழந்தையின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு பொருந்தவில்லை. இதனால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டு மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை தந்தையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் சிறுமியின் தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thanjavur father sexual harassment daughter


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal