டிக் டாக் பொறுக்கி மட்டுமல்ல.. வழிப்பறி.. கொள்ளை.. கட்டப்பஞ்சாயத்து.. காவல் துறையினரின் விசாரணையில் பகீர் தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரம் சேர்ந்தமரம் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகனின் பெயர் கண்ணன் (வயது 19). இவன் ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே பயின்றுள்ள நிலையில், டிக் டாக் செயலியில் காதல் மன்னன் என்ற பெயரில் பல விடீயோக்களை பதிவு செய்துள்ளான். இவனின் கோமாளித்தனமான விடியோபதிவுகள், காதல் வசனங்கள் என நவரசகலைகளை பிழிந்து தள்ளியதால் இவனுக்கு நான்கு இலட்சம் பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ள நிலையில், இதன் மூலமாக சல்லிக்காசு பிரயோஜனம் இல்லாத லைக்குகளை வாங்கி குவித்து வந்துள்ளான். 

இவன் கல்லூரிகளில் பயின்று வருவது போலவும், பாசம் கொண்ட மன்மதன் போலவும் சிறுமிகள், திருமணம் முடிந்த பெண்கள் என பலரையும் ஏமாற்றி பெண்களிடம் பழகி வந்துள்ளான். பின்னர் பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வீடியோ எடுத்து, மாபிங் செய்து மிரட்டி வந்துள்ளான். இவனது மிரட்டலுக்கு பயந்து போன பெண்கள் தனது மோதிரம், நகைகள் மற்றும் பணம் என கொடுத்து வந்த நிலையில், இவன் மீது நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை கைது செய்தனர். 

இவனிடம் இருந்த அலைபேசி, மெமரி கார்டு மற்றும் பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவனுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் தேடி வருகின்றனர். இவனிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இது தொடர்பான விசாரணையில், இவன் ஏற்கனவே தமிழக காவல்துறையை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் வெளியே வந்த கண்ணன் டிக் டாக் செயலிக்கு அறிமுகமாகி, படிப்பையும் தொடராமல் கட்டிட பணிக்கு சென்று வந்துள்ளான்.

தனது பின்னணி குறித்து எந்த விதமான விஷயத்தையும் தெரிவிக்காமல் பெண்களிடம் பாசமாக பழகி, அவர்களின் அலைபேசி எண்ணை பெற்று வீடியோ கால் செய்யச்சொல்லி ஆபாசமாக படம்பிடித்து சித்தரித்து பெண்களை மிரட்டி வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மானத்திற்கு பயந்து பணம் மற்றும் நகை என இழந்துள்ளனர். இதுமட்டுமல்லாது இந்த காமுகனின் மீது வழிப்பறி, கொள்ளை போன்ற பல வழக்குகளும் இருந்துள்ளது. இறுதியாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவனின் மீது தற்போது குண்டர் சட்டமும் பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tenkasi tic tok culprit arrest police investigation shocking report


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal