வாக்களிக்கப் போகிறீர்களா? இல்லை உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? - சரிபார்க்க நாளை ஒருநாள் மட்டுமே வாய்ப்பு!
you going vote Or your name removed from list You have only one day left check
தமிழகத்தின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தகுதியுள்ளவர்களைக் கண்டறியும் ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள்’ கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் 19-ல் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதன் விளைவாக, 6.41 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக சரிந்தது.புதிய பதிவுகளுக்கு இறுதி அழைப்பு: பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்த புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (ஜனவரி 30) முடிவடைகிறது
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டம் வராததால் இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் அரங்கேற உள்ள நிலையில், வாக்களிக்கும் உரிமையைப் பெற இதுவே இறுதித் தருணமாகும்.தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, 16 தொகுதிகளில் இருந்த 40 லட்சம் வாக்காளர்களில் 15 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இவர்களில் 1.50 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 2.50 லட்சம் பேர் முகவரி மாறித் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், விடுபட்டவர்களில் வெறும் 2.11 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
இதனால், சென்னையில் மட்டும் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளது.அடுத்தகட்ட நடவடிக்கை: நாளை முடிவடையும் இந்த விண்ணப்பச் செயல்முறையைத் தொடர்ந்து, பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழகத்தின் ‘இறுதி வாக்காளர் பட்டியல்’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
English Summary
you going vote Or your name removed from list You have only one day left check