வேட்பாளர் இருக்காங்களா? 12 அதிகம்..5 தொகுதிகள்தான்..டார்ச் லைட் வேண்டாம்.. உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்க..அதிர்ச்சியில் கமல்! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மநீம வேட்பாளர்களை அவர்களின் சொந்த ‘டார்ச் லைட்’ சின்னத்தில் அல்லாமல், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

2021 சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவீத வாக்குகளை பெற்றது. அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் இரண்டாம் இடமும், 25 தொகுதிகளில் மூன்றாம் இடமும் பிடித்தது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகிய நிலையில், 2024 மக்களவைத் தேர்தலின் போது மநீம திமுக கூட்டணியில் இணைந்தது. அதற்குப் பதிலாக கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் மநீம–திமுக உறவு நெருக்கமாகியது.

இந்த நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர முடிவு செய்துள்ளதாக கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மநீம நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்றும், டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக தலைமை தரப்பில், மநீமக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் ஒதுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு கட்சி குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுச் சின்னம் வழங்கப்படும். 2021-ல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதால் மநீமக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்தது.

இந்த முறை மநீமக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் கிடைத்தால், அவர்களின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும். கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் செயல்பட வைக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சின்னம் தொடர்பான முடிவு, மநீம கட்சியின் அடையாள அரசியல் மற்றும் எதிர்கால வளர்ச்சியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதம் தற்போது தீவிரமாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 are too many only 5 constituencies no torch light stand on the rising sun symbol


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->