நீங்கள் உளவுத்துறையே... ஒத்துழைப்பு கொடுங்கள்.. நாங்கள் இருக்கிறோம்.. காவல்துறை அதிகாரி..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்ற கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல்துறை சார்பில் கிராம பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், "கிராம ஊராட்சியில் வசித்துவரும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி ஊராட்சி மன்ற தலைவர். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் அவர்கள்தான்.

மக்கள் கொடுத்த இந்த உயர்ந்த பொறுப்பை விருப்பு, வெறுப்பு இன்றி மனசாட்சியோடு பணியாற்றுங்கள். ஊராட்சிகளில் சிறப்பு கூட்டத்தை கூட்டியோ அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வாயிலாகவோ சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது, தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கிராம மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

24 மணிநேரமும் பாகுபாடின்றி காவலர்களை நியமித்து கண்காணிப்பது போல கேமரா தன் பணியை செய்கிறது. உள்ளதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டும் உங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும் உதவியாக இருக்கும். கிராமங்கள்தோறும் இதனை பொருத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்வர வேண்டும். 

அதுபோலவே எஸ் ஓ எஸ் என்ற காவலன் செயலியை அனைவரது செல்போனை ஆன் செய்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இதன் மூலமாக பல பெண்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். 

நான் செல்லும் இடங்களிலெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் என்னுடைய செல்போன் எண்ணை கொடுத்து விட்டு வருகின்றேன். இந்த மாவட்டத்தில் ஹலோ போலீஸ் எனும் செயலியும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது  இது துவங்கப்பட்ட 35 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டு உள்ளது.

அவற்றில் 59 சம்பவங்களுக்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.

செல்போனில் பேச முடியவில்லை என்றாலும், எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் பிரச்சினைகளை பதிவு செய்யலாம். வீடியோ எடுத்தும் அனுப்பலாம். என்னிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தான் என்னுடைய உளவுத்துறை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் காவல்துறை. பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்."என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai meeting police officer speech


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal