வீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை?..! கண்ணீரில் பெண்ணின் பெற்றோர்கள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள தளவாடை பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகளின் பெயர் இந்துமதி (வயது 21). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் மருத்துவம் பயின்று வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியை சார்ந்தவர் மகாலிங்கம். இவரது மகனின் பெயர் சதீஷ்குமார் (வயது 28). 

இவர்கள் இருவருக்கும் இடையே முகநூலின் மூலமாக ஏற்பட்ட பழக்கமானது நட்பு ரீதியில் தொடர்ந்து வந்த நிலையில்., இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில்., இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால்., கடந்த வருடத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். 

marriage, Indian marriage, south Indian marriage,

Tamil online news Today News in Tamil

இவர்கள் இருவரும் ஒரத்தநாட்டில் தனி வீடு எடுத்து வாடகைக்கு குடியிருந்து வந்த நிலையில்., இந்துமதி வீட்டிற்கு திருமணம் நடந்தது தெரியாததால் மருத்துவம் பயின்று வந்துள்ளார். சதீஷ் அங்குள்ள பகுதியில் எலக்டீரிசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நேரத்தில்., சதீஷுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படவே., மது அருந்தி வந்துள்ளார். 

மேலும்., கடந்த சில நாட்களாக தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த செயலின் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில்., நேற்று இரவு திடீரென இந்துமதி தூக்கில் பிணமாக தொங்குவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

died, suicide, murder, suicide attempt, killed,

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இது குறித்து இந்துமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

English Summary

in orathanad wife killed by her husband due to drama love and marriage


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal