ஜம்மு - காஷ்மீரைப் பிரிக்க சட்டவிரோத நடவடிக்கை; தடை செய்யப்பட்ட அமைப்பு சேர்ந்த பெண் பிரிவினைவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம்..!
Delhi High Court sentences female separatist of Dukhtaran e Millat organization to life imprisonment
கடந்த 2021-ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசியா அன்ட்ராபி மற்றும் அவரது கூட்டாளிகளான ஃபெஹ்மீதா, நஸ்ரின் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தியது.
ஜம்மு - காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என கடந்த ஜனவரி 14 அன்று தடைசெய்யப்பட்ட 'துக்தரன்-இ-மில்லத்' (DeM) அமைப்பின் தலைவர் ஆசியா அன்ட்ராபி வலியுறுத்தி இருந்தார்.
குறித்த DeM அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் நகலைக் கோரியும், பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கக் வேண்டும் என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது.

இந்த வழக்கு, பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாத அமைப்புகள் உட்பட, நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பது தொடர்பானது ஆகும், ஆக, 2021-ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக, ஆசியா அன்ட்ராபி மற்றும் அவரது கூட்டாளிகளான ஃபெஹ்மீதா, நஸ்ரின் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியது.
இதவேளை, குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை முற்றிலும் மறுத்ததுடன், உரிய விசாரணைக்கும் உத்தரவிடக் கோரி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது தொடர்புடையசட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் இன்று குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் சதி மற்றும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA)கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதியும் துக்தரன்-இ-மில்லத் (DeM )அமைப்பின் தலைவருமான ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் சட்டரீதியான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக குறித்து தீர்ப்பு அமைந்துள்ளது.
துக்தரன்-இ-மில்லத்
1987-இல் நிறுவப்பட்ட அமைப்பு. இது காஷ்மீரைத் தளமாகக் கொண்ட பெண்கள் மட்டுமே உள்ள ஓர் அமைப்பாகும். இதன் தலைவராக ஆசியா அன்ட்ராபி உள்ளார். இந்த அமைப்பு, 1967-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ், 2004-இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டு DeM தலைவர் ஆசியா ஆன்ட்ராபி என்ஐஏவால் கைது செய்யப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய புலனாய்வு முகமை (NIA)அவர் மீதும் அந்த அமைப்பு மீதும் வழக்குப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi High Court sentences female separatist of Dukhtaran e Millat organization to life imprisonment