ரூ.16,729 கோடிக்கு RCB அணியை வாங்கிய மும்பையை தலைமையிடமாக கொண்ட நிறுவனம்; புதிய உரிமையாளர்கள் யார்..? - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்க 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக உள்ள பெங்களூரு அணி விற்பனைக்கு வந்த நிலையில், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் தலைமையிலான ஒரு சக்திவாய்ந்த கூட்டமைப்பு, 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 16,729 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது.

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகி இருந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,285 கோடிக்கு வாங்கியுள்ளார்.

வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல்லின் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் கூட்டமைப்போடு ராஜஸ்தான் அணியை கல் சோமானி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கல் சோமானி, வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல்லின் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் கூட்டமைப்போடு ராஜஸ்தான் அணியை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.சி.பி. அணியை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே விற்றுவிட வேண்டும் என அந்த அணி நிர்வாகம் விரும்பி, அதிகாரப்பூர்வமாக ஏலப் பட்டியலிலும் வைத்திருந்தது. அதன்படி, அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 16,732 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது.

இவர்களைத் தவிர போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் நிரந்தர தனியார் பங்கு முதலீட்டு உத்தி (BXPE) ஆகியவை அடங்கும். இங்கிலாந்தைச் சேர்ந்த டியாகோ பிஎல்சி-யின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) உடன், ஆர்சிபி-யின் முழு 100% உரிமையைப் பெறுவதற்கான ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்த ஒப்பந்தத்தில் ஆண்கள் ஐபிஎல் அணியும், பெண்கள் டபிள்யூபிஎல் அணியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநரான ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்கின்றனர். போல்ட் வென்ச்சர்ஸின் நிறுவனரான டேவிட் பிளிட்சர் மற்றும் BXPE-யின் தலைமைச் செயல் அதிகாரியான வைரல் படேல் ஆகியோரும் முதலீட்டாளர் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB Team Sold for Rs 16729 Crore


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->