அதிமுக - பாஜக கூட்டணி; தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனுக்கு 05 தொகுதிகள் ஒதுக்கீடு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று, மே 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

நீருவரை அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நிலை தொடர்ந்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரம் பின்வருமாறு:

அதிமுக (AIADMK): 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக (BJP): 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக (PMK - அன்புமணி ராமதாஸ் அணி): 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமமுக (AMMK - டிடிவி தினகரன்): 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 05 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டையில் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 05 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் த.மா.கா. போட்டியிடவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the AIADMK and BJP alliance GK Vasans Tamil Maanila Congress has been allotted 5 constituencies


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->