அணையில் செல்பி முயற்சி..! புதுமண பெண் உட்பட நால்வர் பரிதாப பலி.!!   
                                    
                                    
                                   in krishnagiri pambar dam 4 peoples died selfie expectation 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகேயுள்ள சாமல்பட்டி பகுதியை சார்ந்த கிராமத்தில் வசித்து வருபவரின் பெயர் இளங்கோ. இவரது மகளின் பெயர் கவிதா (வயது 19), சினேகா (வயது 18) மற்றும் மகனின் பெயர் சந்தோஷ் (வயது 14). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கவிதா மற்றும் சினேகா பயின்று வந்துள்ளனர். 
மேலும்., சிறுவன் சந்தோஷ் அங்குள்ள ஊத்தங்கரை தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில்., அங்குள்ள ஓடப்பட்டி பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் நிவேதா (வயது 20). நிவேதா இளங்கோவின் அக்கா மகளாக இருந்து வரும் நிலையில்., இவருக்கும் அங்குள்ள பர்கூர் பகுதியை சார்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 
திருமணம் முடிந்த புது தம்பதியினர் இருவரும் அங்குள்ள திரையரங்கில் திரைப்படம் காண சென்ற நிலையில்., இவர்களுடன் கனிதா, சினேகா, சந்தோஷ் மற்றும் உறவினர் யுவராணி என ஆறு பேர் மொத்தமாக சென்று., திரையரங்கில் திரைப்படத்தை பார்த்துவிட்டு., அங்குள்ள பாம்பாறு அணைக்கு சென்று வரமுடிவு செய்து பாம்பாறு அணைக்கு வந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., அணையினை ஒட்டி நின்றவாறு அலைபேசியில் புகைப்படம் எடுக்க முடிவு செய்து., புகைப்படம் எடுத்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஐவர் நீருக்குள் தவறி விழுந்து தத்தளித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு கூச்சலிட்ட நிலையில்., யுவராணி கரைக்கு திரும்பியுள்ளார். மீதமுள்ள நால்வரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
இருவரும் அலறித்துடித்து கூச்சலிட்ட நிலையில்., இவர்களின் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் பதறியடித்து வந்து., விசயத்தை கேட்டறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பரிதாபமாக உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
பின்னர் இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருமணம் முடிந்த 15 நாட்களில் புதுமண பெண் உயிரிழந்தது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       in krishnagiri pambar dam 4 peoples died selfie expectation