சாக்குமூட்டையில் அரைபாதி எரிந்த நிலையில் பெண்ணின் பிணம்...!! விசாரணையில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பத்தில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு அருகேயுள்ள இரயில்வே நகர் பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் கடந்த மாதத்தின் போது 14 ஆம் தேதியன்று சாக்குமூட்டையொன்று தீயில் எரிந்து கொண்டு பயங்கர துர்நாற்றத்தை வெளிப்படுத்தியது. இதனையடுத்து அங்குள்ள மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சாக்கு மூட்டையை சோதனையிட்டனர். 

அந்த சோதனையில்., பெண்ணொருவரின் பிணம் அரைகுறையாக எறிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில்., கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை பகுதியை சார்ந்த சிவசங்கரன் என்பவர்., கடந்த மாதத்தின் 9 ஆம் தேதியன்று தனது மனைவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

karur, karur junction, கரூர் சந்திப்பு, கரூர், கரூர் ரயில் நிலையம்,

இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்., இதனையடுத்து மனைவி கிடைத்துவிடுவார் என்ற ஆவலில் அவரும் மனைவியை தேடி அலைந்துள்ளார். காவல் துறையினரும் - சிவசங்கரனும் பல இடங்களில் தேடி அலைந்த நிலையில்., சிவசங்கரனின் மனைவியான சூரியகுமாரி கிடைக்கவில்லை. 

இந்த சமயத்தில்., சிவசங்கரனின் நடவடிக்கையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவசங்கரனின் அலைபேசியை சோதனை செய்ய முடிவு செய்த காவல் துறையினர்., சிவசங்கரனின் அலைபேசியை தர கூறி கேட்டுள்ளனர். இதனை கேட்ட சிவசங்கரன் அலைபேசி தொலைந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து., இறுதியாக அலைபேசி பயன்படுத்தப்பட்ட இடம் குறித்து காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் அதிகாரிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். 

அந்த சோதனையில்., சிவசங்கரனின் அலைபேசி கடைசியாக கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவசங்கரனின் அலைபேசி இறுதியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்த தகவலை கேட்டுள்ளனர். அந்த நேரத்தில்., சாக்குமூட்டையில் எரிந்த இளம்பெண் குறித்து தெரிவித்துள்ளனர். 

தாம்பத்தியம், கள்ளக்காதல், illegal affair, couple enjoy, affair, husband wife enjoy,

இதனையடுத்து சிவசங்கரனிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்த விசாரணையில்., மனைவியை கொலை செய்து சாக்குமூட்டையில் வைத்து வீசி சென்ற இடத்தை காட்டியுள்ளான். மேலும்., எனது மனைவிக்கும் - வாலிபன் ஒருவருக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்து வந்தது. 

இதனால் அடிக்கடி வாலிபருடன் தனிமையில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்த செய்தியானது எனக்கு தெரியவந்தது. இதனை அறிந்து மனைவியை கண்டித்த எனது கண்டிப்பையும் கண்டு கொள்ளாது., வாலிபருடன் கள்ளக்காதல் உறவை மேற்கொண்டு வந்தார். மேலும்., அந்த வாலிபனுடன் கொஞ்சி பேசி டிக் டாக் இணையத்தில் வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். 

எனது திட்டப்படி., கடந்த ஏழாம் தேதியன்று வீட்டிற்கு சென்ற சமயத்தில்., இரவு நேரம் என்பதால் உறங்கிக்கொண்டு இருந் அவளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் சாக்குப்பையில் வைத்துவிட்டு அங்கேயே உறங்கினேன். பின்னர் காரில் சாக்குமூட்டையை போட்டு., இங்கு வந்து மூட்டையை வீசிவிட்டு சென்றேன். 

died, murder, killed, suicide attempt, கொலை, குற்றம், தற்கொலை,

என் மீது சந்தேகம் ஏற்பட கூடாது என்ற காரணத்தால் நடித்துக்கொண்டு இருந்தேன். என்னை காவல் துறையினர் தற்போது கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார். மேலும்., அந்த இடத்தில் இருந்த குப்பைக்கு தீவைத்த சமயத்தில் மூட்டையும் சேர்ந்து எரிந்துள்ளது தெரியவந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur girl killed by husband due to illegal affair


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal