ரூ.15 ஆயிரம் கடனிற்காக 13 வயது சிறுமியை திருமணம் செய்த கொடூரம்..! மருவீட்டில் அரங்கேறிய பெரும் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகேயுள்ள கவுண்டனூர் பகுதியை சார்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவியின் பெயர் அஞ்சலை (வயது 40). இவர்கள் இருவருக்கும் சரவணகுமார் (வயது 23) என்ற மகன் உள்ளார். இக்குடும்பத்தாரிடம் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கடவூர் கிராமத்தை சார்ந்த தம்பதியினர் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். 

கடவூரில் வசித்து வந்த தம்பதி கூலித்தொழில் செய்து வந்த நிலையில்., இவர்கள் பெற்ற பணத்தை திரும்பி செலுத்த இயலாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., கடனை திரும்பி தரக்கூறி மூக்கனின் குடும்பத்தார் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., மூக்கனின் குடும்பத்தார் பெரும் சூழ்ச்சி புரிய திட்டமிட்டுள்ளனர். 

இவர்களின் திட்டப்படி ரூ.15 ஆயிரம் கடனிற்காக பள்ளியில் பயின்று வந்த 13 வயது சிறுமியை சரவண்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து., இரு வீட்டாரும் கடந்த ஜூன் மாதத்தின் 27 ஆம் தேதியன்று சிறுமிக்கு கட்டாய திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். மேலும்., தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் புத்தாடையில் கழுத்தில் தாலி எற கண்கலங்கி இருந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture,

இந்த நிலையில்., சிறுமியுடன் கடந்த 5 மாதமாக சரவணகுமார் குடும்பம் நடத்தி வந்த நிலையில்., தன் பெற்றோர் எப்படியாவது தன்னை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய நிலையில்., இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தினமும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்துள்ளார். தினம்தோறும் பல்வேறு சிரமங்களை உடலளவிலும்., மனதளவிலும் சிறுமி அனுபவித்து வந்த நிலையில்., இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சரவணகுமார் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள்., சரவணகுமாரின் பெற்றோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் சிறுமியை அங்குள்ள காப்பகத்தில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul child marriage child help line investigation and arrest


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal