அதிரடியாக களமிறங்கிய ரஜினி ரசிகர்.. பதட்டத்தில் போராளிகள்..!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் வசித்து வருபவர் சினோரா பி.எஸ்.அசோக். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 

இவர் சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான மனுவில், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக நான் இருந்து வருகிறேன். 

கடந்த 22 ஆம் தேதியன்று தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் இருந்த திராவிட விடுதலை கழகத்தை சார்ந்த உமாபதி என்ற நபரின் தலைமையில், நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. 

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை எளிதில் நான் அடையாளம் காட்டிவிடுவேன். இவர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக கோஷமிட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும், ரஜினிகாந்தை தெருவில் உயிரோடு நடக்க விடமாட்டோம் என்றும், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியிருந்தனர். 

இதனால் நடிகர் ரஜினிகாந்தின் உயிருக்கும், அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai commissioner office rajinikanth fan register complaint


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal