11 வயது சிறுவனை கடத்தி முட்புதரில் வீசி சென்ற நபர்கள்?.. சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் காலடிபேட்டை வரதராஜன் தெரு பகுதியை சார்ந்தவர் ஜானகிராமன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பெயர் கிஷோர் (வயது 11). இவர் அங்குள்ள கொருக்குப்பேட்டைப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில்., இவர் கடந்த புதன்கிழமையன்று காலை நேரத்தில் பென்சில் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்ற நிலையில்., மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தனது மகனை தேடியும் காணாது பரிதவித்துக்கொண்டு இருந்தனர். இச்சமயத்தில் நேற்று முன்தினமன்று காலை நேரத்தில் ஜானகிராமனுக்கு தொடர்பு அழைப்பு வந்துள்ளது. 

investigation,

இந்த அழைப்பில் மறுமுனையில் பேசிய நபர்கள் கத்திவாக்கம் இரயில் நிலையத்திற்கு அருகேயிருக்கும் புதரில் கிஷோர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான ஜானகிராமன் தனது மகனை மீட்டு அழைத்து வந்த நிலையில்., இது தொடர்பாக அங்குள்ள திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பென்சில் வாங்க கடைக்கு சென்ற போது மர்ம நபர்கள் முகத்தில் மயக்க மருந்தினை அளித்ததாகவும்., பின்னர் தனக்கு நடந்தது என்ன என்பது தமக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும்., தம்மை கடத்திய நபர்கள் வடமாநிலத்தை சார்ந்தவர் என்றும் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் காவல் துறையினர் சந்தேகத்துடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai 11 year boy kidnapped and released police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal