எறும்பு போல வரிசையாய் வாகனம்.. அடாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்கள்..! அறிய வேண்டியது என்ன?..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலிருக்கும் சுங்கச்சாவடிகளில் மூன்று நிமிடத்திற்கு மேலாக காத்திருக்கும் பட்சத்தில்., சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறை நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். 

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் சங்கத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருந்தாலும்., சட்டவிரோதமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் அராஜகம் நடந்துள்ளது. 

toll plaza traffic,

சுங்கச்சாவடி என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில்., மூன்று நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பெரும்பாலான சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி கொள்ளையடிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர் தொழுப்பேடு என்ற 2 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. 

இந்த சுங்கச்சாவடியானது காலை மற்றும் மாலை வேளையிலும்., வாரத்தின் இறுதி நாட்களிலும்., பண்டிகை காலத்திலும் நெடும் தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் நிலையில்., வாகனங்கள் ஊர்ந்து செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. 

toll plaza traffic,

தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல்., பீக் ஹவர்களில் நெரிசலுடன் கூடிய சண்டை போன்றவை என்றும்., சுமார் மூன்று கிமீ தூரத்திற்கு வரிசையாக 
நிற்க்கும் வாகனங்கள் போன்ற பிரச்சனை., தற்போதையை பாஸ்ட் டேக் பயன்படுத்தியும் நெரிசலில் சிக்கிய சோகம் என்று தொடர்ந்துள்ளது. மேலும்., என்னதான் நடந்தாலும் எனக்கு பணம் தான் முக்கியம் என்று அடாவடி வசூலில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என்றும்., நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு காவலர் கூட இல்லை என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டும்., கோரிக்கையும் வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chengalpet and tholutur toll plaza like activity to robbery


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal