பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு...! இன்று, நாளை சென்னை மாநகராட்சி இணையதளம் முடக்கம்..!
Important announcement public Chennai Corporation website down today and tomorrow
சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முக்கிய பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (13.12.2025) மற்றும் நாளை (14.12.2025) என தொடர்ந்து இரண்டு நாட்கள் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணையதளம் தற்காலிகமாக செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இணையதளத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் கிடைக்காது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
English Summary
Important announcement public Chennai Corporation website down today and tomorrow