தமிழக வானிலை நிலவரம்: புத்தாண்டு தினத்தில் மழைக்கு வாய்ப்பு!
IMD TN Rain alert 26 12 2025
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் (டிச. 27, 28) பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றாலும், டிசம்பர் 29-ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை தொடங்கும்.
குறிப்பாக, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய புத்தாண்டு தினங்களில் தென்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் மற்றும் உறைபனி எச்சரிக்கை:
டிசம்பர் 28-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். இதன்காரணமாக, நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் உறைபனி (Frost) ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும். எனவே, இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
English Summary
IMD TN Rain alert 26 12 2025