கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
ADMK EPS condemn to DMK mk Stalin govt
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ள கண்டன அறிக்கையில், திமுக அரசின் பொம்மை முதல்வர் மு க ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS condemn to DMK mk Stalin govt