#தமிழகம் || கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டை கொலை., கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பத்தின் பின்னணியில் கள்ளக்காதல் விவகாரம் இருப்பது தெரியவந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவரது தாய் சவுந்தரம்மாள் (வயது 65) என்பவரும்  தோட்டத்து வீட்டின் கட்டிலில் தூங்கிய படியே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜுக்கு திருமணமாகி சுபாஹாசினி (வயது 35) என்ற மனைவியும், தன்வந்த் (வயது 4) என்ற மகனும் உள்ளனர். 

செல்வராஜ் விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் பணம் வசூல் செய்வதற்காக ஒத்தப்பட்டியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (வயது 29) வேலை பார்த்துவந்துள்ளார். 

கோபி கிருஷ்ணன்-க்கும், சுபாஹாசினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து செல்வராஜிடம் அவர் தாயார் தெரிவிக்கவே,  கோபிகிருஷ்ணனை கண்டித்து, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த கோபிகிருஷ்ணன் தனது கூட்டாளிகள் மற்றும் கள்ளக்காதலி சுபாஹாசினியுடன் சேர்ந்து, தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது தாயாரை வெட்டி கொன்றனர்.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிகிருஷ்ணன், சுபாஹாசினி, செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த்பாபு (வயது 22) மற்றும் இரு பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal affair police arrest school student and 3 more


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->