போராட்டத்தில் ஈடுபட்டால் No Work, No Pay..தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..!
If you engage in the struggle No Work No Pay Chief Secretarys warning
நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
English Summary
If you engage in the struggle No Work No Pay Chief Secretarys warning